சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்கள் அவ்வீடுகளிலேயே கட்டாயம் தங்கியிருக்க வேண்டும்
Related Articles
சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்கள் அவ்வீடுகளிலேயே கட்டாயம் தங்கியிருக்க வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இவ்வாறான வீடுகளுக்கு வெளிநபர்கள் பிரவேசிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களாகிய நீங்கள், தொடர்ச்சியாக பயணத்தடைகளை மேற்கொண்டு, வீடுகளில் தங்கியிருங்கள் இதன் மூலம் உங்கள் பகுதியையும் விரைவில் விடுவிக்க முடியும். அத்துடன் நீண்ட நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதி மக்கள் இன்னும் ஒரிரு நாட்களுக்கு வீடுகளில் தங்கியிருந்தால், உங்கள் பகுதியையும் விடுவிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களும் தமது வீடுகளிலேயே தங்கியிருப்பது கட்டாயமாகும். வீடுகளிலிருந்து வெளியே செல்ல முடியாது. அத்துடன் இவ்வீடுகளுக்கு வெளி நபர்கள், வருகை தருவார்களாயின் அதுவும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவதாக அமைகிறது. அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”