fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பண்டிகை காலத்தில் பொதுமக்கள் செயற்படவேண்டிய விதம் குறித்து அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 15, 2020 12:45

எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் செயற்படவேண்டிய விதம் குறித்து அரச வைத்திய உத்தியோகத்தர்களின் சங்கத்தின் டொக்டர் ஹரித்த அழுத்கே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

“பண்டிகை காலம் எம்முன்னே காணப்படுகிறது. விசேடமாக நத்தார் பண்டிகையும் ஜனவரி புதுவருடப் பிறப்பும் எம்மை நோக்கி வருகிறது. முன்னர் இப்பண்டிகைகளை கொண்டாடிய விதத்தில் இன்று எம்மால் கொண்டாட முடியாது. இப்பண்டிகை மாத்திரமல்ல , தமிழ் சிங்கள ,புத்தாண்டும், ரமழான் பண்டிகையும், வெசாக் மற்றும் பொசன் நிகழ்வுகளை எம்மால் அனுஸ்டிக்க முடியாது போவிட்டது. கொவிட் வைரசுடன் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் போது ஒரு சில விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சுகாதார அமைச்சு இதுகுறித்து தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. பண்டிகை காலத்தை சிறந்த முறையில் முகாமைத்துவப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்ய வேண்டியுள்ளது. அதிகாரிகளுக்கு தேவையான ஆதரவை வழங்குவோமாயின் 2021 ம் புது வருடத்தை சிறந்த முறையில் கொண்டாடுவதற்கான காலம் உருவாகலாம்.”

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 15, 2020 12:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க