வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர் நாடு திரும்பினர்..
Related Articles
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 504 பேர், இன்று தாயகம் திரும்பியுள்ளனர். டுபாயிலிருந்து 144 பேரும் , மாலைத்தீவிலிருந்து 31 பேரும், கட்டாரிலிருந்து 51 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து 75 பேரும் , ஜப்பானிலிருந்து 203 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.