இரத்தினபுரி மற்றும் கெக்கிராவை பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் பலி
Related Articles
இரத்தினபுரி மற்றும் கெக்கிராவை பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரத்தினபுரி கொழும்பு வீதியின் பண்டாரநாயக்க மாவத்தைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 70 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளொன்றை வீதியின் குறுக்காக தள்ளிச்சென்றபோது, அவர் மீது லொறியொன்று மோதியுள்ளது. குறித்த நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கெக்கிராவை – தம்புள்ளை வீதியின் சூரியகம சந்திக்கருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 07.45 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 48 வயதுடைய நபரென தெரியவந்துள்ளது. குறித்த மோட்டார் சைக்கிள் மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.