மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138வது ஜனன தினம் இன்றாகும்.
Related Articles
இந்திய சுதந்திர போராட்ட காலப்பகுதியில் தன் மொழிப் புலமையால் கவிதைகள் பாடல்கள் ஊடக தன்னெழுத்துக்களால் மக்களை ஒன்று திரட்டிய போராளியாக சுப்ரமணிய பாரதி கருதப்படுகிறார். இவர் தமிழ் மொழிக்கு தந்த படைப்புக்கள் அத்தனையும் தமிழ் மொழியைக் காக்கும் பொக்கிஷங்களாக இன்றும் மிளிர்ந்திருக்கின்றன. பாரதியார் என அனைவராலும் அழைக்கப்படும் மகாகவி சுப்ரமணிய பாரதி 1882 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ம் திகதி இந்தியாவின் எட்டயபுரத்தில் பிறந்தார்.
தன் வாழ்நாள் வரை பெண்கள் உரிமை சமூக எழுச்சி தமிழின் வளர்ச்சிக்கென அரும்பங்காற்றிய மகாகவி சுப்ரமணிய பாரதி கடந்த 1921 ம் ஆண்டு செப்டம்பர் 11 ம் திகதி தனது 39 வது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். ‘யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்’ எனக் கூறி தமிழ் மொழியை தன் வாழ்வாக்கிய பாரதியின் 138 வது ஜனனத்தை முன்னிட்டு உலகளவில் சிறப்பு நிகழ்வுகள் வருடந்தோறும் இடம்பெற்று வருகின்றன.
அதற்கமைய மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138 வது பிறந்த தினத்தை ஒட்டி யாழ்ப்பாணத்தில் நினைவு நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள இந்த துணைத் தூதுவர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நல்லூர் ஆலயத்திற்கு அருகிலுள்ள பாரதியாரின் நினைவுச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய துணைத் தூதுவர் இந்நிகழ்வில் இணைந்திருந்தார். அதன் பின்னர் பாரதியாரின் திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வட மாகாண முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை பாட்டுக்கு ஒரு புலவன் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138 வது ஜனனதினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பாடும் மீன் அரிமா கழகத்தின் ஏற்பாட்டில் பாரதியாரின் முழு உருவச் சிலை திறப்பு விழாவும் பாரதி கென்னடி எழுதிய மும்தாசு கவிஞனின் பாப்பா பாடலின் முகாமை கருத்துக்கள் எனும் நூல் வெளியீடும் மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது. மட்டக்களப்பு ;, திருகோணமலை வீதியில் திருப்பெருந்துறை சந்தியில் பாரதியாரின் முழு உருவச் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்ப்pடத்தக்கது.