இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திய 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 9 கிலோ தங்கத்துடன் இலங்கையர்கள் ஐவரை கைதுசெய்துள்ளதாக இந்திய கடலோர காவற்படையினர் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. மன்னார் வளைகுடா கடலில் சந்தேகத்திற்கிடமான படகொன்று சோதனையிடப்பட்டது. இதன்போதே 9 கிலோ கிரேம் தங்கம் கைப்பற்றப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தங்கம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திய 5 பேர் கைது
படிக்க 0 நிமிடங்கள்