எல்பீஎல் கிரிக்கட் தொடரில் கடைசி லீக் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. களம்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் ஆகிய அணிகள் போட்டியில் மோதவுள்ளன. இரவு 8 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளன. இதனால் இன்றைய போட்டியில் புதிய வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியும் அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது. தம்புள்ள வைகிங், களம்பு கிங்ஸ், ஜெப்னா ஸ்டேலியன்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் ஆகிய அணிகளே அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளன. கென்டி டஸ்கஸ் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இதேவேளை எல்பீஎல் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.