மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக இருமுனைகளில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்ட மாஅதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இதேநேரம் சம்பவம் தொடர்பாக வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மஹர சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் உடல்களை தகனம் செய்வதா இல்லையா என்பது தொடர்பான வழக்கு வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்ட மாஅதிபர் சார்பில் அரச சிரேஸ்ட சட்டதரணி நிஷாரா ஜயரட்ன நீதிமன்றத்தில் விளக்கமளித்தார். இந்த கிளர்ச்சி கைதிகளின் சூழ்ச்சியின் வெளிப்பாடா அல்லது வெளிநபர்களின் தொடர்புடன் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரிக்குமாறு சட்;ட மாஅதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார். சூழ்ச்சியின் வெளிப்பாடாக ஏற்பட்ட இந்த அனர்த்தத்திற்காக யார் பொறுப்பு கூற வேண்டுமென்பது கண்டறியப்பட வேண்டும். ஸ்தல விசாரணையின் பின்னர் கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பீடு செய்வதற்கு அரசாங்கத்;தின் பிரதம மதிப்பீட்டாளர்களின் மதிப்பீட்டு அறிக்கையொன்று பெற்று கொடுக்கப்பட வேண்டுமென நிஷாரா ஜயரட்ன தெரிவித்தார். கிளர்ச்சி இடம்பெற்ற போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்கள் யார், எந்த சந்தர்ப்பத்தில் படுகொலையா, இடையிடையே துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலைமைகள் நியாயமானதா பிரத்தியேக பாதுகாப்பு உரிமை மீறியுள்ளதா என்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களான சந்துன் விஜயவர்தன, எஸ்.டீ ச்சன்ன பெரேரா, பி.பி தசநாயக்க ஆகியோருக்கு பூதவுடல்கள் தொடர்பான மேலதிக மரண விசாரணைகளை நடத்துவதற்கு சட்ட மாஅதிபர் நீதிமன்றத்தின் உத்தரவை கோரியிருந்தார். மேலதிக மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள் பூதவுடல்கள் புத்திஜீவிகள் குழுவினால் பரிசோதிக்கப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. சடலங்களில் கோவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளமையினால் எம்பியூலன்ஸ் வண்டிகளை பயன்படுத்தி றாகமவில் இருந்து ஐ.டி.எச் வைத்தியசாலை வரை எடுத்து செல்ல நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று கொள்வதற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் சடலங்களை அரச செலவில் தகனம் செய்வதற்கு சுகாதார பணிப்பாளருக்கு உத்தரவு வழங்குமாறும் கோரியதாக அரச சிரேஸ்ட சட்டதரணி நிஷாரா ஜயரட்ன தெரிவித்தார்.
உயிரிழந்த 11 கைதிகளுள் மற்றொரு சடலம் உறவினர்களால் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டது. இதன் அடிப்படையில் எட்டு பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் இன்று அமைச்சர் அலி சப்ரியினால் சமர்ப்பிக்கப்பட்;டது.