ஜமால் கசோக்கியின் படுகொலை குறித்த ஒளி நடாக்களை சமர்ப்பிக்காமைக்கான காரணத்தை அறிவிக்குமாறு உத்தரவு
Related Articles
ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் படுகொலை குறித்த ஒளி நடாக்கள் மற்றும் ஏனைய தகவல்களை சமர்ப்பிக்காமைக்கான காரணத்தை அறிவிக்குமாறு நிவ்யோர்க் நீதிமன்றம் சி.ஐ.ஏ பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளது. வொசிங்டன் போஸ்ட் பத்திரிகையின் ஊடகவியலாளராக செயற்பட்ட ஜமால் கசோக்கி ஸ்த்தான்புல் நகரிலுள்ள சவுதி கவுன்சிலர் அலுவலகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து சர்வதேச ரீதியில் கடும் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதன் மூலம் சவுதி அரேபியாவின் நற்பெயருக்கும் கலங்கம் ஏற்பட்டது. இப்படுகொலைக்கு பின்னால் சவுதி அரேபியாவின் இளவரசரான மொஹமட் பின் சல்மான் காணப்படுவதாகவே குற்றம்சாட்டப்பட்டது.
சீ.ஐ.ஏ மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய இப்படுகொலையுடன் மொஹம் பின் சல்மான் தொடர்பு பட்டுள்ளதாக தீர்மானிக்கப்பட்டது. எவ்வாறாயினும் சி.ஐ.ஏ.குறித்த சாட்சிகளை நீதிமன்றத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்காமை குறித்து நிவ்யோக் நீதிமன்றம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.