உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென மற்றுமொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் 12 சட்டத்தரணிகளை கொண்டதாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுப்பெற்ற ரியர் எட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்றைய தினம் சட்டமா அதிபருடன் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதனையடுத்து ஊடகங்களுக்க கருத்து தெரிவித்த போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுப்பெற்ற ரியர் எட்மிரல் சரத்வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.