லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மேலும் இரு போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. தொடரின் 16வது போட்டி ஜெப்னா ஸ்டேலியன்ஸ் மற்றும் கெண்டி டஸ்கர்ஸ் அணிகளுக்கிடையில் பிற்பகல் 03.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 17வது போட்டி தம்புள்ள வைக்கிங் மற்றும் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையில் இரவு 08.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை டுPடு தொடரில் இதுவரை 15 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. சகல அணிகளும் தலா 6 போட்டிகள் வீதம் விளையாடியுள்ளன.
புள்ளிப்பட்டியலில் ஜெப்னா ஸ்டேலியன்ஸ் அணி 9 புள்ளிகளுடன் நிகர ஓட்டவேக அடிப்படையில் முதலிடத்திலுள்ளது. தம்புள்ள வைக்கிங் அணி 9 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், கொழும்பு கிங்ஸ் அணி 8 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றிப்பெற்று இரு புள்ளிகளுடன் நிகர ஓட்டவேக அடிப்படையில் நான்காம் இடத்திலுள்ளது. கெண்டி டஸ்கர்ஸ் அணியும் ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றிப்பெற்று இரண்டு புள்ளிகளுடன் பட்டியலில் இறுதி இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.