பல்கலைக்கழக உபவேந்தர்கள் நியமனம் தொடர்பில் புதிய பொறிமுறை பின்பற்றப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரீஸ் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக உபவேந்தர் நியமனத்திற்காக இதுவரை பின்பற்றப்பட்ட முறை அவசரமாக மாற்றப்பட்டதால் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பல்கலைக்கழக நிர்வாக சபை உறுப்பினர்களின் வாக்குமூலம் முதல் மூன்று இடங்களுக்க தெரிவுசெய்யப்படும் ஒருவர் ஜனாதிபதி மூலம் உபவேந்தராக நியமிக்கப்படுவார். கடந்த பெப்ரவரி மாதம் 6ம் திகதி வரை குறித்த வழிமுறையே பின்பற்றப்பட்டது. தற்போதைய அரசாங்கம் ஆட்சி பீடம்ஏற முன்னர் யாழ்பாணம், களனி, வயம்ப, சபரகமுவ மற்றும் ஊவ – வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களுக்கு உபவேந்தர்களை தெரிவு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு வாக்கெடுப்பை நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதை அவசரமா நிறுத்தியது. 3 மாதங்களின் பின்னரே புதிய பொறிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதேவேளை பழைய முறைக்கு பதிலாக பொருத்தமான புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரீஸ் தெரிவித்துள்ளார். பழைய முறையை விட புதிய முறை நீதியானதும், வெளிப்படைத்தன்மை மிக்கதுமாக காணப்படுகிறது. மிகவும் பொருத்தமான நபரை உபவேந்தர் பதவிக்கு தெரிவுசெய்ய புதிய முறை மிகவும் பொருத்தமானதென்பதை நிரூபிக்க முடியும். புதிய முறையின் கீழ் குழுவொன்று நியமிக்கப்படும். குறித்த குழுவினர் உபவேந்தர் பதவிக்கு விண்ணபித்தவர்களின் அனுபவங்கள் மற்றும் தகமைகள் தொடர்பில் ஆராய்ந்து விரிவான அறிக்கையை சமர்பிப்பர். குறித்த அறிக்கை பல்கலைக்கழ நிர்வாக சபைக்கு சமர்பிக்கப்படும். 3 முதல் 5 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்படும். இதனால் புதிய முறை மிபொருத்தமானதென கல்வி அமைச்சர் ஜீ.எல்.பிரீஸ் தெரிவித்தார்.