நேற்று இனங்காணப்பட்ட 798 கொரோனா தொற்றாளர்களில் 526 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவிக்கிறது. இவ் எண்ணிக்கை 526 ஆகும். இந்த 526 பேரில் கூடுதலானோர் பொரள்ளையச் சேர்ந்தவர்கள் அவ் எண்ணிக்கை 126 ஆகும். இவர்களில் 175 பேர் வெலிக்கடை சிறைச்சாலையுடன் தொடர்புபட்டவர்கள் என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்குழி, கொம்பனித்தெரு, மருதானை, வெள்ளவத்தை, கோட்டை, கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொவிட் தொற்றாளர்கள் நேற்று இனங்காணப்பட்டனர்.
கம்பஹா மாவட்டத்திலிருந்து 97 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன் இவர்களில் கூடுதலானோர் மஹர சிறைச்சாலையைச் சேர்ந்தவர்கள் இவ் எண்ணிக்கை 55 ஆகும். களுத்துறை மாவட்டத்திலிருந்து 53 பேரும் இனங்காணப்பட்டதுடன் அம்பாரை, கண்டி, இரத்தினபுரி, குருநாகல் உள்ளிட்ட மேலும் பல மாவட்டங்களிலிருந்து தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
தற்போது மினுவாங்கொடை மற்றும் பேலியகொட கொவிட் கொத்தணி 25818 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 17850 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 29377 ஆகும். இவர்களில் 21257 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். 7978 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெறுகின்றனர்.