எதிர்வரும் பண்டிகைக் காலப்பகுதியில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் ஹேமத்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை விரைவுப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமத்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.