திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி
Related Articles
திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஜெயபுர பகுதியிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், ஸ்தலத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலையில் இருந்து கந்தளாய் நோக்கி பயணித்த சீமந்து லொறி எதிர் திசையில் பயணித்து முச்சக்கரவண்டியில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் புத்தளம் பதவிய பகுதியை சேர்ந்த 34 மற்றும் 38 வயதுடைய நபர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீமந்து லொறியின் சாரதி தம்பலகாமம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் சடலங்கள் கந்தளாய் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. தம்பலகாமம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.