இலங்கையின் முதலாவது காற்றலை மின் உற்பத்தி நிலையம் மக்களின் உரிமைக்காக கையளிக்கப்படவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய காற்றலை மின் உற்பத்தி நிலையத்தின் திறக்கு விழா இடம்பெற்றது.
நாட்டின் மின் உற்பத்தில் துறையில் மற்றுமொரு மைக்கல்லாக குறித்த மின் உற்பத்தி நிலையம் அமையவுள்ளது. எதிர்வரும் 2 வருட காலத்திற்குள் 800 மெகாவோல்ட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளதாகவும், அதன் ஊடாக பல்வேறு அனுகூலங்கள் கிடைக்கப்பெறவுள்ளது. மன்னார் கரையோரத்திற்கு சமாந்தரமாக 12 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வகையில் 33 காற்றாலைகளை கொண்ட மின் உற்பத்தி கட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.