வவுனியாவில் உரிமையாளர் இன்றி வீதிகளில் திரியும் மாடுகளை பிடித்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கட்டாக்காளி மாடுகள் வீதிகளில் நடமாடுவதால் வவுனியா நகர சபைக்குட்பட்ட பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனால் பல விபத்துக்களும் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன.
இதற்கு தீர்வாக வீதிகளில் உரிமையாளர் இன்றி அலைந்து திரியும் மாடுகளை பிடித்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிடம் பராமரிக்க ஒப்படைக்க வவுனியா நகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மாடுகளை பிடிக்கும் நடவடிக்கை இன்று காலை நகர சபையின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது.