கொரோனா வைரஸ் தொற்றாளர் பயன்படுத்திய நாணயத்தாள் ஊடாக ஏனையோருக்கு வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரின் உமிழ் நீர் நாணயத்தாள்களில் படிந்து காணப்படும் போது அந்த நாணயத்தாளை விரல்களில் ஸ்பரிசம் செய்து முகம், வாய்;, மூக்கு ஆகியவற்றை ஸ்பரிசித்தால் அந்த நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுமென சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.