ஷரிஆ சட்டத்தை நாட்டின் சட்டமாக மாற்றுவதற்கு சிலர் மேற்கொள்ளும் முயற்சி தவறானதென அதிமேற்றாணியார் அதி வணக்கத்திற்குரிய மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன அதிமேற்றாணியார் இல்லத்தில் அதிமேற்றாணியார் அதி வணக்கத்திற்குரிய மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்த போது இதனை தெரிவித்தார். தாக்குதலின் உண்மை நிலையை எப்போது தெரிந்துகொள்வது என்ற எதிர்பார்ப்பில் தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.