சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத 35 பேர் கைது
Related Articles
சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைதாகியுள்ளனர். குறித்த 35 பேரும் முகக்கவசம் அணியாது வீதியில் சுற்றித்திரிந்தமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இது தொடர்பான சுற்றவளைப்பு ஆரம்பிக்கப்பட்ட கடந்த ஒக்டோம்பர் மாதம் 30ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை 987 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.