பெருந்தோட்ட மக்களுக்கு கடந்த அரசாங்கம் எவ்வித காணி உறுதிகளையும் வழங்கவில்லை : இராஜாங்க அமைச்சர் ஜீவன்
Related Articles
பெருந்தோட்ட மக்களுக்கு கடந்த அரசாங்கம் எவ்வித காணி உறுதிகளையும் வழங்கவில்லையென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மலையக மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டதாகவும், அதனை பயன்படுத்தி வங்கியில் கடன் பெற முடியுமெனவும் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் சபையில் கூறியிருந்தார். எனினும் அவ்வாறு வழங்கப்பட்ட ஆவணம் காணி உறுதி இல்லையென ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார். குறித்த ஆவணத்தை வைத்துக்கொண்டு எந்தவொரு வங்கியிலும் கடன் பெற முடியாதென அவர் தெளிவுப்படுத்தினார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் வழங்கப்பட்ட 7 பேர்ச்சர்ஸ் காணிக்கு பதிலாக, 10 பேர்ச்சர்ஸ் காணி வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளில் அதிகபட்சமாக 20 ஆயிரம் வீடுகளையே மலையகத்தில் நிர்மாணிக்க முடியும். இதனைவிடவும் அவர்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதே முக்கியமானதென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.