புரவி சூறாவளியின் தாக்கம் காரணமாக யாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 226.4 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சியாகும். இதற்கு மேலதிகமாக ஆலம்பிட்டி, ஒட்டுச்சுட்டான் ஆகிய பகுதிகளில் 200 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
புரவி சூறாவளியானது இன்று மன்னார் வலைகுடா ஊடாக நாட்டை விட்டு நகருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனுடன் குறித்த சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறைவடையுமென எதிர்ப்பார்க்கப்படுவதாக வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.