80 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
Related Articles
80 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் எனப்படும் ஒருதொகை வெளிநாட்டு போதைப்பொருள் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. மறைத்துவைக்கப்பட்ட நிலையில் மத்திய தபால் பரிமாற்று நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட 4 போதைப்பொருள் பொதிகளே சுங்கப்பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர், மேலதிக சுங்கப்பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்திலிருந்து, கொழும்பு, நாவல, வாத்துவ மற்றும் அஹங்கம ஆகிய பிரதேசங்களிலுள்ள முகவரிக்கு குறித்த பொதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அவை சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், 60 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் எனப்படும் கஞ்சா போதைப்பொருள் 500 கிராம் மற்றும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 80 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி தொடர்பில் கண்டறிந்து சந்தேக நபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.