வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டவர் கராகொட பிரதேசத்தை சேர்ந்த 37 வயதடையவரென தெரியவந்துள்ளது. அவரை காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள.
இந்நிலையில் ஹொரவப்பொத்தான பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது கைக்குண்டு ஒன்றுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை கெப்பிட்டிகொல்லேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.