கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த மேலும் 333 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். கட்டாரிலிருந்து 49 பேரும், ஜோர்தானிலிருந்து 284 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் விமான நியைத்தில் வைத்து பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இதேவேளை புரவி சூறாவளி காரணமாக கட்டுநாயக்க விமான நிலைய சேவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லையென விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த மேலும் 333 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்..
படிக்க 0 நிமிடங்கள்