புறவி சூறாவளியின் நேரடி தாக்கங்கள் படிப்படியாக குறைவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் பூநகரியிலிருந்து புத்தளம் வரையிலான கரையோர பகுதிகளில் கடல் கொத்தளிப்பு அதிகரித்து காணப்பட்ட போதிலும் இது குறித்து வீண் அச்சம் கொள்ள தேவையில்லையென திணைக்களம் மேலும் அதிகரித்துள்ளது.
நாட்டின் கிழக்கு கரையோர பகுதிக்கு அருகாமையில் இருந்த சூறாவளியானது நேற்றிரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் நாட்டிற்குள் ஊடுருவியது. தற்போது சூறாவளியானது நாட்டிற்குள் ஊடுருவியுள்ளதுடன் மன்னாரை நோக்கி நகர்ந்து வருகின்றது. ஆகவே இச்சூறாவளியானது நாட்டிலிருந்துமுழுமையாக நகரவில்லை. இன்று காலை வேளையில் இச்சூறாவளியானது நாட்டிலிருந்து நகர கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. இதனால் வழமை போன்று நாட்டின் வட பகுதியில் கரையோர பகுதிகளிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மழை பெய்ய கூறும் என்பதை கூறிக் கொள்கின்றோம். சாதாரணமாக 150 மி;.மீட்டர் மழை பெய்யகூடும். இதற்கு மேலதிகமாக காற்றின் வேகமானது 70முதல் 80 இடைப்பட்ட கிலோ மீட்டர்களாக காணலாம். நாட்டின் மேல் வட கரையோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென மீன சமூகத்தை கேட்டுக் கொள்கின்றோம்.)