தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 987 பேர் இதுவரை கைது
Related Articles
தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை தீவிரமாக கடைபிடிக்க வேண்டியேற்படும் என பொலிசார் வலியுறுத்தியுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 987 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜீத் ரோகன தெரிவித்துள்ளார்.
“13 பொலிஸ் அதிகார பிரிவுகளில் தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பை அண்டிய 10 பொலிஸ் அதிகார பிரிவுகளிலும் கம்பஹா மாவட்டத்தின் 3 பொலிஸ் அதிகார பிரிவுகளிலும் இச்சட்டத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக மட்டக்குழி வெல்லம்பிட்டி, அட்டுலுகம, அலவத்துவல பொலிஸ் அதிகார பிரிவுகளில் ஒரு சில கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதி மக்களினது நடவடிக்கைகள் மற்றும் சுகாதார ஆலோசனைகளை பேணி செயல்படுகின்றமை வரவேற்கத்தக்கவை. தொடர்ந்தும் அவ்வாறே விதிமுறைகளை கடைபிடிக்குமாறு அம்மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். இதன் மூலம் வெகு விரைவில் உங்களது பகுதிகளை விடுவிக்க முடிகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் முக கவசங்கள் அணியாத சமூக இடைவெளியை பேணாத சுமார் 35 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை 987 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக கவசங்களை அணிpயாத சமூக இடைவெளியை பேணாத நபர்களை தேடி பொலிசார் தொடர்ந்தும் செயல்படுகின்றனர். நீங்கள் எப்பிரதேசத்தில் இருப்பவராயிpனும் கட்டாயம் முக கவசங்களை அணியுங்கள். சமூக இடைவெளியை பேணுங்கள். இது எமக்குரிய கடமையாகும்.”