எல்பிஎல் தொடரின் மேலும் இரு போட்டிகள் நாளை
Related Articles
எல்பிஎல் தொடரின் மேலும் இரு போட்டிகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளன. கோல்; கிளேடியேட்டர் மற்றும் ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணிகளுக்கிடையில் முதலாவது போட்டி இடம்பெறவுள்ளது. கோல் அணிக்கு சஹிட் அப்ரிடியும், ஜப்னா அணிக்கு திஸ்ஸர பெரேராவும் தலைமைத்தாங்கவுள்ளனர். போட்டி பிற்பகல் 3.30க்கு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் ஆரம்பமாகும்.
இதேவுNளை தொடரின் 10வது போட்டி தம்புள்ள வைகிங் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. தம்புள்ள அணிக்கு தசுன் ச்சானக்கவும், கண்டி அணிக்கு குசல் பெரேராவும் தலைமைத்தாங்கவுள்ளனர். போட்டி இரவு 8.00 மணிக்கு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் ஆரம்பமாகும்.
இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் காணப்படுகிறது. குறித்த அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு கிங்ஸ் அணி 3 போட்டிகளில் பங்கேற்று அதில் 2இல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், தம்புள்ள வைகிங் அணி 3இல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் பட்டியளிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.