LPL : தம்புள்ள வைக்கிங்ஸ் அணி 29 ஓட்டங்களால் வெற்றி / ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 54 ஓட்டங்களால் அபார வெற்றி..
Related Articles
லங்கா ப்ரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் தம்புள்ள வைக்கிங்ஸ் மற்றும் கொழும்பு கிங்ஸ் அணிகள் மோதிய நிலையில் தம்புள்ள வைக்கிங்ஸ் அணி 29 ஓட்டங்களால், வெற்றிபெற்றது.
இதேவேளை நேற்றைய இரண்டாவது போட்டியில் கண்டி டஸ்கஸ் மற்றும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிகள் மோதியிருந்தன. இதில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 54 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
13 ஓட்டங்களில் அவர்களின் முதலாவது விக்கெட்டுக்காக அவிஸ்க்க பெர்னாண்டோ ஆட்டமிழந்தார். பானுக்க ராஜபக்ஸ 15 ஓட்டங்களோடு, ஆட்டமிழந்தார். மிகச் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அணித்தலைவர் திசர பெரேரா 28 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்கள் 5 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 68 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவரோடு சத இணைப்பட்டாம் வழங்கிய தனஞ்சயடி சில்வா 38 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள் 5 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலான 61 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் கண்டி டஸ்கஸ் சார்பாக நவீனுல் ஹக் 3 விக்கெட்டுக்களையும் அசேல குணரட்ன இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இதனையடுத்து 186 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கஸ் அணியை ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி 131 ஓட்டங்களுக்கு சுருட்டியது. அணி சார்பாக ப்ரெண்டன் டெய்லர் அதிகூடியதாக 46 ஓட்;டங்களை பெற்றுக்கொடுத்தார். ஜப்னா அணியின் பந்து வீச்சில் உஸ்மான்; சின்வாரி 3 விக்கெட்டுக்களையும் சுரங்க லக்மால் , திசர பெரேரா , வலிந்து ஹசரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.எல்.பி.எல். தொடரின் மேலும் இரு போட்டிகள் நாளை நடைபெறவுள்ளன. போட்டிகள் அனைத்து வசந்தம் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.