தெலுங்கு படத்தில் அறிமுகமாகும் அனிகா..
Related Articles
தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது. இதை அடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.
15 வயதாகும் அனிகா, ஹீரோயின்களுக்கு இணையாக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வந்தார். இதன் பலனாக அவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளது. மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கப்பேலா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அனிகா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.