LPL : டஸ்கஸிடம் வீழ்ந்தது கிலேடியேட்டஸ் / தம்புள்ள வைகிங்சை வீழ்த்தி ஜப்னா ஸ்டேலியன்ஸ் வெற்றி
Related Articles
எல்பிஎல் கிரிக்கட் போட்டி தொடரில் நேற்றிரவு இடம்பெற்ற கோல் கிலேடியேட்டஸ் மற்றும் கண்டி டஸ்கஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 25 ஓட்டங்களால் கண்டி டஸ்கஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கஸ் அணி உரிய 20 ஓவர் முடிவில் 5 விக்கட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றது.
இவ்வணியில் அதி கூடிய ஓட்டங்களை பெற்ற பிரண்டன் டெலேர் 35 பந்துகளுக்கு முகம் கொடுத்து 51 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். குசல் மெண்டிஸ் 49 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் கிலேடியேடஸ் வீரர்கள் 7 விக்கட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை மாத்திரமேபெற்றுக் கொண்டது. தனுஸ்க குணதிலக்க 53 பந்துகளுக்கு முகம் கொடுத்து 82 ஓட்டங்களை அணிக்கு பெற்றுக் கொடுத்தார்.
இதேவேளை எல்பிஎல் போட்டி தொடரில் ஜப்னா ஸ்டெலியன்ஸ் தம்புள்ள வைகிங் அணிகளுக்கு நேற்று இடம்பெற்ற போட்டியில் 66 ஓட்டங்களால் ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அணி தலைவர் திசர பெரேரா ஆட்டமிழக்காது 97 ஓட்டங்களையும் சத்துரங்கடி சில்வா 29 ஓட்டங்களையும் வனீ’து ஹசரங்க 24 ஓட்டங்களையும் சொஹைப் மலிக் 24 ஓட்டங்களையும் அணிக்குபெற்றுக்கொடுத்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள வைட் கிங் வீரர்களுக்கு 19.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது. சமித் பட்டேல் 41 ஓட்;டங்களையும் அணி தலைவர் தசுன் சானக 35 ஓட்டங்களையும் திரட்டினர்.