fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

LPL தொடரின் மேலும் இரு போட்டிகள் இன்று..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 1, 2020 13:22

LPL தொடரின் மேலும் இரு போட்டிகள் இன்று..

LPL தொடரின் மேலும் இரு போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் அணிகளுக்கிடையிலான போட்டி பிற்பகல் 3.30 மணியளவில் ஆரம்மாகவுள்ளது. என்ஞலோ மெத்தியூவ்ஸ் தலைமையில் கொழும்பு கிங்ஸ் அணியும், தசுன் ச்சானக்க தலைமையில் தம்புள்ள வைகிங் அணியும் களமிறங்கவுள்ளன.

இதேவேளை இரவு 8.00 மணிக்கு ஜப்னா ஸ்டேலியன்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி இடம்பெறவுள்ளது. திஸ்ஸர பெரேரா தலைமையில் ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியும் குசல் பெரேரா தலைமையில் கண்டி டஸ்கர்ஸ் அணியும் களமிறங்கவுள்ளன.

இதேவேளை இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள ஜப்னா அணி இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் ஓட்ட நிகர சராசரியின் அடிப்படையில் முதல் இடத்தில் உள்ளது. கொழும்பு கிங்ஸ் அணி 2ம் இடத்திலும் கண்டி டஸ்கர்ஸ் அணி 3ம் இடத்திலும் உள்ளன. தம்புள்ள வைகிங் அணி 4ம் இடத்தில் உள்ளது. கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 3 போட்டிகளில் பங்குப்பற்றி மூன்றிலும் தோல்வியடைந்து இறுதிஇடத்தில் உள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 1, 2020 13:22

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க