தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அது அடுத்த சில மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் தொடர்ந்து வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத்தொகுதியானது மேற்கு திசையில் இலங்கையின் வடக்கு கரையைநோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளின் வானிலையில் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கைக்கு கிழக்காக உள்ள கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம்கூடிய கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தால் அடுத்த சில நாட்களுக்கு வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.