இன்று முதல் 104 ரயில்கள் சேவையில்..

இன்று முதல் 104 ரயில்கள் சேவையில்.. 0

🕔10:03, 30.நவ் 2020

அலுவலக சேவை உள்ளிட்ட கொழும்புக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வரும் மற்றும் அங்கிருந்து வெளியேரும் 104 ரயில்கள் இன்று முதல் சேவையில் ஈடுப்படுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படும்.

Read Full Article
கொரோனா தொற்றினால் நேற்றைய தினம் 7 உயிரிழப்புக்கள் பதிவு

கொரோனா தொற்றினால் நேற்றைய தினம் 7 உயிரிழப்புக்கள் பதிவு 0

🕔09:58, 30.நவ் 2020

கொரோனா தொற்றினால் நேற்றைய தினம் 7 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. கொழும்பு 02 ஐ சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும், கொதடுவ பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவரும், மொரடுவை பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் ,அகுரெஸ்ஸ பிரதேசத்தை

Read Full Article
பிற்பகல் வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம்

பிற்பகல் வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் 0

🕔07:44, 30.நவ் 2020

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிற்பகல் வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா, மத்திய மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பெய்யுமென வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.

Read Full Article
கொழும்பு மற்றும் கம்பஹாவில் தனிமைப்படுத்தப்பட்ட ஐந்து பகுதிகள் இன்று விடுவிப்பு

கொழும்பு மற்றும் கம்பஹாவில் தனிமைப்படுத்தப்பட்ட ஐந்து பகுதிகள் இன்று விடுவிப்பு 0

🕔07:28, 30.நவ் 2020

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முடக்கப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளன. அத்துடன் மேலும் சில பகுதிகள் புதிதாக தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் புறக்கோட்டை, கொழும்பு கரையோரம், மட்டக்குளி ஆகிய பகுதிகளும், கம்பஹா மாவட்டத்தில் ராகம மற்றும்

Read Full Article
ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீள அறிவித்தல் வரை செல்ல வேண்டாமென அறிவுறுத்தல்

ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீள அறிவித்தல் வரை செல்ல வேண்டாமென அறிவுறுத்தல் 0

🕔16:04, 29.நவ் 2020

நாட்டின் கிழக்கு கரையோர பகுதியின் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மீள அறிவித்தல் வரை செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையுடன் கூடிய சந்தர்ப்பத்தில் கடற்பகுதி சற்று கொந்தளிப்புடன் காணப்படுமென வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் குறிப்பிட்டார்.

Read Full Article
அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் உஷ்ணமான வானிலை

அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் உஷ்ணமான வானிலை 0

🕔15:58, 29.நவ் 2020

அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் உஷ்ணமான வானிலை நிலவ ஆரம்பித்துள்ளது. இன்றைய தினம் அதிகரித்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிட்னி உட்பட வடக்கு விக்டோரியா, மேற்கு நிவ் சவுத் வேல்ஸ் ஆகிய இடங்களில் 45 பாகை செல்சியசிற்கும் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் சில நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்குமென அவுஸ்திரேலிய வானிலை

Read Full Article
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை 0

🕔15:57, 29.நவ் 2020

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை சார்ந்தோருக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதிய கடன் திட்ட முறை, மற்றும் ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் யோசனைமுறைக்கமைய நிவாரண காலம் வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் இதில் உள்ளடங்குவதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Read Full Article
சுமார் ஐயாயிரத்து 729 பேர் தற்போதுதனிமைப்படுத்தலில்..

சுமார் ஐயாயிரத்து 729 பேர் தற்போதுதனிமைப்படுத்தலில்.. 0

🕔15:56, 29.நவ் 2020

ஐயாயிரத்து 729 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. முப்படையினரால் 53 தனிமைப்படுத்தல் மையங்கள் முன்னெடுத்துச்செல்லப்படுகின்றன. நேற்றைய தினத்தில் மாத்திரம் 11 ஆயிரத்து 936 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Read Full Article
முக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத குற்றச்சாட்டில்70 பேர் கைது

முக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத குற்றச்சாட்டில்70 பேர் கைது 0

🕔15:54, 29.நவ் 2020

முக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 70 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய இதுவரை மொத்தமாக 866 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்தும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படுமென பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Read Full Article
சிறுவர்களின் நோயெதிர்ப்புச்சக்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கூடுதல் கவனம்

சிறுவர்களின் நோயெதிர்ப்புச்சக்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் 0

🕔15:51, 29.நவ் 2020

சிறுவர்களின் நோயெதிர்ப்புச்சக்தி மற்றும் அவர்களுக்கான போஷணை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. குழந்தைகளின் உடல் எடை அதிகரித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் தகவல்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Read Full Article

Default