71 ஆண்டுகளுக்கு பின்னர் புதுடில்லியில் அதி குறைந்த வெப்பநிலை பதிவாகிய மாதமாக 2020 நவம்பர் கருதப்படுகின்றது என இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று டில்லி நகரின் வெப்பநிலை 10.2 பாகை செல்சியசாக காணப்பட்டது. 1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டில்லி நகரின் வெப்பநிலை 10.2 பாகை செல்சியசாக காணப்பட்டது. அதற்கு முன்னர் 1938, 1931, 1930ஆம் ஆண்டுகளில் டில்லி நகரில் அதிகுறைந்த வெப்பநிலை முறையே 9.6, 9 பாகை மற்றும் 8.9 பாகை செல்சியசாக காணப்பட்டதாக இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இம்மாதத்தில் மிகக்குறைந்த வெப்பநிலை பதிவான நாட்களாக நவம்பர் 3, 20, 23 மற்றும் 24ஆம் திகதிகள் காணப்பட்டன.

71 ஆண்டுகளுக்கு பின்னர் புதுடில்லியில் அதி குறைந்த வெப்பநிலை பதிவு
படிக்க 1 நிமிடங்கள்