வரவுசெலவு திட்ட குழுநிலை விவாதத்தின் 7ம் நாள் அமர்வு ஆரம்பம்..
Related Articles
வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தின் 7ம் நாள் ஏழாம் நாள் இன்றாகும். காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. அடுத்த வருடத்திற்கான சுகாதார அமைச்சு மற்றும் சுதேச வைத்திய ஊக்குவிப்பு கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி , சமூக சுகாதார இராஜாங்க அமைச்சு மற்றும் மருந்து உற்பத்தி விநியோகம் , ஒழுங்குறுத்தல் ராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதம் பாராளுமன்றில் இடம்பெற்று வருகிறது. கடந்த 23 ம் திகதி ஆரம்பமான குழுநிலை விவாதம், எதிர்வரும் 10 ம் திகதி நிறைவடையும். அன்றையதினம் மாலை 05 மணிக்கு வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.