கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை சார்ந்தோருக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதிய கடன் திட்ட முறை, மற்றும் ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் யோசனைமுறைக்கமைய நிவாரண காலம் வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் இதில் உள்ளடங்குவதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் அனைத்து தீர்மானங்களும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியே முன்னெடுக்கப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தற்போது பல்வேறு சர்வதேச நாடுகளில் குளிர்காலம் ஆரம்பாகியுள்ளது. அங்குள்ள சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தர முயற்சிக்கின்றனர்.
இந்நிலையில் சிறிய எண்ணிக்கையிலானோரை அழைத்து வந்து அவர்களை தெரிவு செய்த ஹோட்டல்களில் தங்க வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளுது. அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இருக்காது. உரிய சுகாதார வழிகாட்டல்களுக்கமைய நாட்டிற்கு வருகை தந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதன் பின்னரே சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். இதற்கு சுகாதார பிரிவினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.