LPL தொடரின் முதற்போட்டியிலேயே ரசிகர்களுக்கு சுப்பர் ஓவரின் பரபரப்பு..
Related Articles
லங்கா ப்ரீமியர் லீக் தொடர் நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகியது. முதல் போட்டி Colombo Kings மற்றும் Kandy Tuskers அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. கொரோனா அச்சறுத்தலுக்கு மத்தியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி போட்டித்தொடர் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. நேற்றைய ஆரம்ப போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற Colombo Kings அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Kandy Tuskersஅணி 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 219 ஓட்டங்களை பெற்றது. அணி தலைவர் குஷல் ஜனித் பெரேரா 87 ஓட்டங்களையும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் மன்ட்ப்ரீட் கோனி, துஷ்மன்த ச்சமீர, குயிஸ் அஹமட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்களை கைப்பற்றினர். 220 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Colombo Kingsஅணியும் 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களையே பெற்று போட்டியை சமன்செய்தது.
அதற்கமைய போட்டியின் வெற்றி சுப்பர் ஓவரின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது. சுப்பர் ஓவரில் Colombo Kings அணி ஒரு விக்கட்டை இழந்து 16 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில், Kandy Tuskers அணி 12 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது. LPL தொடரின் முதல் போட்டியே ரசிகர்களுக்கு விறுவிறுப்பளிக்கும் போட்டியாக அமைந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்நிலையில் போட்டித்தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் புயடடந புடயனயைவழசள மற்றும் துயககயெ ளுவயடடழைளெ அணிகளுக்கிடையில் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.