இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷவினால் அவரது பெயர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், அதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியது. கடந்த 1986ம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக, பொலிஸ் சேவையில் இணைந்துகொண்ட சி.டி.விக்ரமரத்ன், 34 வருட சேவை புரிந்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட சி.டி.விக்ரமரத்ன. ஒரு வருடமும் 7 மாதங்களும் குறித்த பதவியை வகித்து வந்தார். அவர் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவரென்பது குறிப்பிடத்தக்கது.