மெரடோனாவின் மறைவு காரணமாக 3 நாட்கள் துக்க தினமாக பிரகடனம்
Related Articles
ஆர்ஜென்டினாவின் முன்னாள் பிரபல உதைப்பந்தாட்ட வீரர் தியாகோ மெரடோனா மாரடைப்பினால் தனது 60 வயதில் உயிரிழந்தார். உடல் நிலை சீரற்றிருந்ததினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இரு வாரங்களுக்கு முன்னர் அவசர சத்திர சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டார். நேற்று புவனோஸ் அயஸ் நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள அவரது வீட்டில் மாரடைப்பினால் மரடோனா உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் அறிவித்தன. 1970 ம் தசாப்தத்தின் நடுப்பகுதியில் சர்வதேக உதைப்பந்தாட்ட மைதானத்திற்குள் பிரவேசித்த மரடோனா 1986 ம் ஆண்டில் உலக உதைப்பந்தாட்ட கிண்ணத்தை ஆர்ஜென்டினாவுக்கு பெற்றுக்கொடுத்தார். மெரடோனாவின் மறைவு காரணமாக 3 நாட்களை துக்க தினமாக பிரகடனப் படுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.