புதிய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ரியர் அட்மிரால் சரத்வீரசேகர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சமல் ராஜபக்ஸ அரச பாதுகாப்பு உள்விவகார மற்றும் இடர் முகாமைத்துவ ராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.