லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் ஹம்பாந்தோட்டை சூரியவெவவில் இன்று மாலை ஆரம்பமாகவுள்ளது. தொழிநுட்பம் உயர்மட்டத்தில் பயன்படுத்தப்பட்டு தீவிர சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் இம்முறை போட்டித் தொடர் இடம்பெறுகிறது. போட்டித் தொடரின் உத்தியோகபூர்வ ஒளிபரப்பு உரிமை சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்புக்கு கிடைத்துள்ளது.
போட்டித் தொடரை ஆரம்பித்து வைக்கும் வகையில் முதலாவது போட்டி கழம்பு கிங்ஸ் மற்றும் கண்டி டஸ்கஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. அத்துடன் இம்முறை போட்டித் தொடரை கண்டுகளிக்க ரசிகர்கள் எவருக்கும் விளையாட்டு மைதானத்தில் பிரவேசிக்க சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இதற்கமைய சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் வசந்தம் ரி.வி. அலைவரிசை ஊடாக இப்போட்டித் தொடரை நாடு பூராகவும் பரந்துள்ள அனைத்து ரசிகர்களுக்கும் கண்டுகளிக்க வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை தமிழ் பேசும் இரசிகர்களின் பேரபிமானத்தை பெற்ற வசந்தம் தொலைக்காட்சி வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட நாட்டின் சகல பாகங்களையும் உள்ளடக்கும் வகையில் தனது ஒளிபரப்பை விஸ்தரித்துள்ளது. கொழும்பில் யு.எச்.எப் 35 இலும் கொங்கலையில் யு.எச்.எப். 28 இலும் பிதுருதலாகல யுஎச்எப் 47 இலும் மினுவங்காலயில் யுஎச்எப் 56 இலும் கரகஹதென்னவில் யுஎச்எப் 56 இலும் ஹப்புத்தளை யுஎச்எப் 30 இலும் யாழ்ப்பாணத்தில் யுஎச்எப் 28 இலும் மடுல்சீமையில் யுஎச்எப் 24 இலும் கொழும்பில் விஎச்எப் 10 இலும் மற்றும் கொக்காவிலில் வி.எச்.எப் 10 யிலும் இரசிகர்கள் எல்பிஎல் தொடரை கண்டுகளிக்கலாம்.