தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு பெற்றுக்கொள்ள முடியும்
Related Articles
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு பிரச்சினைகள் இருந்தால் பேச்சுவார்த்தை மூலம் அதற்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமென பொலிசார் தெரிவிக்கின்றனர். கூட்டாக இணைந்து கூட்டங்களை மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடாத்துதன் மூலம் மேலும் தொற்றாளர்கள் உருவாகலாமென பொலிசார் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போது இலங்கையில் பல பகுதிகளிலும் 27924 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 884 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுகாதார அதிகாரிகளுடன் பொலிசாரும் இணைந்து இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தமது வீடுகளுக்கு வெளியே வந்து பயணிப்பதாகவும் தெரியவந்துள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறாத நேரத்தில் இவ்வாறு இடம்பெறுகின்றன. இது தவறாகும். வெளி நபர்கள் இவ் வீடுகளுக்குள் பிரவேசிப்பது தவறாகும். அத்துடன் இந்நடவடிக்கையானது தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு முரணானதாகும்.