fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நேற்றைய தினம் 458 புதிய தொற்றாளர்கள் பதிவு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 25, 2020 12:14

நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொவிட் 19 புதிய தொற்றாளர்கள் 458 பேரும் உள்ளுரில் இனங்காணப்பட்டவர்கள். நேற்றைய தினமும் 4 கொவிட் 19 மரணங்கள் பதிவாகின.

நேற்று பதிவாகிய 4 மரணங்களுடன் நாட்டில் இதுவரை பதிவாகிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 458 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன் இவர்களில் கூடுதலானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவ் எண்ணிக்கை 259 ஆகும். கொம்பனித் தெருவிலிருந்து 90 பேரும் கொட்டாஞ்சேனையிலிருந்து 44 பேரும் மருதானையிலிருந்து 39 பேரும் க்ரேண்ட்பாசிலிருந்து 26 பேரும் வெள்ளவத்தையிலிருந்து 23 பேரும் தெமட்டகொடவிலிருந்து 29 பேரும் இவர்களில் அடங்குகின்றனர். புதுக்கடை , மட்டக்குழி, கொள்ளுப்பிட்டி, ரத்மலானை, மிரிஹானை, வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளிலிருந்தும் கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

களுத்துறை மாவட்;டத்திலிருந்து 78 தொற்றாளர்களும் கம்பஹா மாவட்டத்திலிருந்து 23 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டனர். இதற்கு மேலதிகமாக கண்டி, நுவரெலியா, காலி, யாழ்ப்பாணம், மாத்தறை, இரத்தினபுரி மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இதேவேளை இன்று காலை வரை மினுவாங்கொட ஆடைக் கைத்தொழிற்சாலைமற்றும் பேலிய கொட மீன் வர்த்தக சந்தை கொரோனா கொத்தணியில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 432 ஆகும் இவர்களில் 11156 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 967 ஆகும். 5911 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை 14 ஆயிரத்து 962 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

நாடு திரும்ப முடியாது, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பினர். டோகாவிலிருந்து இருவரும் டுபாயிலிருந்து 50 பேரும் இந்தியாவிலிருந்து 92 பேரும் மாலைதீவிலிருந்து 53 பேரும் இவர்களில் அடங்குகின்றனர். இவர்கள் முப்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 45 மத்திய நிலையங்களில் 4797 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் 7467 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 25, 2020 12:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க