அங்குலான வடக்கு, தெற்கு தனிமைப்படுத்தலில் இருந்து விடுதலை..
Related Articles
அங்குலான வடக்கு மற்றும் அங்குலான தெற்கு ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்திலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றுவதாயின் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை துரித கதியில் விடுவிக்க முடியுமென பொலிசார் தெரிவிக்கின்றனர். இதற்கு பொது மக்களின் பங்களிப்பு இன்றியமையாதவை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
“அங்குலான பகுதியில் இரு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன. தற்போது அப்பகுதிகள் விடுவிக்கப்பட்டன. அப்பகுதியில் உள்ள சொய்சாபுர அடுக்குமாடி வீட்டுத்திட்டம் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பயணத்தடைகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதி மக்கள் தொடர்ந்தும் தமது வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும். நேற்று காலை முதல் ஒரு சில பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் வழங்கிய ஒத்துழைப்பின் பிரகாரமே இத்தடை நீக்கப்பட்டது. இவ் வைரஸ் பரவும் விதத்தில் அவர்கள் செயற்படவில்லை. பயணத்தடைகளை உரிய முறையில் பேணிவந்தனர். இதனால் அப்பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன. கொழும்பு மத்திய வடக்கு பிரதேச மக்களிடமும் அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தின் பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடமும் நீங்களும் உரிய முறையில் தனிமைப்படுத்த்ல் சட்டவிதிமுறைகளை பின்பற்றினால் குறித்த பகுதிகளையும் விடுவிக்கமுடியுமென கேட்டுக்கொள்கின்றோம்.”