LPL கிரிக்கட் தொடர் நாளை மறுதினம் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பம்
Related Articles
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடர் நாளை மறுதினம் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகிறது. முதல் போட்டி கொழும்பு கிங்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் அணிகளுக்கிடையில் நடைப்பெறவுள்ளது. கண்டி அணிக்கு குசல் ஜனித் பெரேரா தலைமைத்தாங்கவுள்ளார். இவ்வணியில் நுவான் பிரதீப், குசால் மென்டிஸ், அசேல குணரத்ன, தில்ருவான் பெரேரா, சிக்குகே பிரசன்ன, இர்பான் பத்தான், முனாப் பட்டேல், லைம் ப்லங்கட், டேல் ஸ்டெய்ன், வஹாப் ரியாஸ் ஆகிய முக்கிய வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.
கொழும்பு கிங்ஸ் அணி ஏஞ்சலோ மெத்திவ்ஸ் தலைமையில் களமிறங்கவுள்ளது. தினேஸ் ச்சந்திமால், இசுரு உதான, அசான் ப்ரியஞ்சன், துஷ்மந்த சமீர, ஜெப்ரி வென்டர்சே, என்ரு ரசல், பெப் டு பெசில்ஸ், மொஹமட் ஹபீஸ், மென்ப்ரிட் கோனி ஆகியோர் அணியில் உள்ளனர். 26ம் திகதி இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
வசந்தம் ரீவியில் எல்பிஎல் தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதற்கென நாடு முழுவதும் வசந்தம் ரீவி ஒளிபரப்பு விஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது. வசந்தம் எப்எம் மற்றும் லக்ஹண்ட வானொலியில் போட்டி தொடர்பான தகவல்கள் வழங்கப்படவுள்ளன.