கல்வி பொதுதாராதர உயர்தரப்பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளது. சுகாதார வழிமுறைகளை பின்பற்றி விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கிறது. 13 பாடங்களுக்கான விடைத்தாள்கள் இதன் போது திருத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். டிசம்பர் முதலாம் திகதியின் பின்னர் நாட்டின் ஏனைய தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் ஏனைய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பமாகுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார். இதற்கென கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் பயன்படுத்தப்படமாட்டாதென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 12ம் திகதி முதல் நவம்பர் மாதம் 6ம் திகதி வரை உயர்தரப்பரீட்சைகள் நடைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உயர்தரப்பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்…
படிக்க 1 நிமிடங்கள்