LPL கிரிக்கெட் போட்டி சுகாதார வழிமுறைகளுடன்..
Related Articles
எல்.பி.எல் கிரிக்கட் போட்டி தொடர் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலா ஆகியன சுகாதார வழிகாட்டலுக்கு ஏற்ப நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 26 ம் திகதி முதல் அடுத்த மாதம் 16 ம் திகதி வரை எல்.பி.எல். இலங்கையில் நடைபெறும். இங்கிலாந்து கிரிக்கட் அணியும் ஜனவரி 14 ம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இந்த போட்டிகளை நடத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பான கூட்டம் இன்று சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். வெளிநாட்டு வீரர்கள் மற்றும் உள்ளுர் வீரர்களின் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
கொவிட 19 தொழிநுட்ப குழு வழங்கிய பரிந்துரைகளுக்கு ஏற்ப போட்டிகள் நடைபெறும். போட்டிகளில் அனைத்து வீரர்களும் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டங்கள் சுகாதார ஆலோசனைகளுக்கு ஏற்ப வீரர்கள் விளையாடவுள்ளனர். போட்டித் தொடரின் சகல போட்டிகளும் வசந்தம் தொலைக்காட்சி ஊடக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. லக்ஹண்ட மற்றும் வசந்தம் வானொலியும் நேரலை வழங்கவுள்ளது.