கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்திய உறவுகளை புதிய பாதையில் இட்டுச்செல்வதை விரிவுபடுத்த கடந்த ஓராண்டு காலத்தில் முடிந்துள்ளதாக தெரிவித்தார். இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்துவதற்கு இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்பாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொற்றுக்கு மத்தியில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உறவுகள் ஊடாக இது தெளிவாகின்றது என்றும் இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் கொவிட் 19 ஒழிப்பிற்கு இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குமென நரேந்திர மோதி மேலும் தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் இருதரப்பு உறவும் மேலும் வலுப்பெறுமெனவும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.