fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தான் அணியிலிருந்து பக்கர் சமான் விலகல்..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 23, 2020 12:52

நியூசிலாந்து கிரிக்கட் தொடரிலிருந்து பாகிஸ்தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பக்கர் சமான் விலகியுள்ளார். பாகிஸ்தான் அணி , நியூசிலாந்தில் 3 ருவென்றி – 20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அடுத்த மாதம் 18 ம் திகதி கிரிக்கட் தொடர் ஆரம்பமாகவுள்ளது. 10 ம் திகதி பயிற்சியாட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கட் வீரர்கள் நியூசிலாந்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்;. இதனால் பாகிஸ்தான் கிரிக்கட் அணி, முன்கூட்டியே நியூசிலாந்து பயணமாகவுள்ளது. இவ்வாறான நிலையில் பக்கர் சமான் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளார். அவருக்கு Pஊசு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் தொடர்ந்தும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 23, 2020 12:52

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க